Monday, August 9, 2010


நல்ல வாய்ப்பு


விளக்கு
வெளிச்சத்தில்
படித்த
நாட்களின்
அருமை
இன்று தெரிகிறது.
அதை
வெறுத்திருந்தால்
இழந்திருப்பேன்
உனக்கு
முதல் நண்பனாகும்
வாய்ப்பை.

நீகூட பிரிக்க முடியாது


என்னிடம்
பேசாதே என்றாய்.
அதற்காக
எத்தனை முறை
வருந்தி
இருப்பாய்.
இப்போதாவது
புரிந்துகொள்
நம்நட்பை
உன்னால் கூட
பிரிக்க முடியாது.

சுவாசம் நீ

உன்
அருகில் இல்லை
நான்.
ஆனாலும்
நான்
சுவாசிக்கும்
காற்றில்
கலந்திருக்கிறாய்
எப்போதும்
நீ
என்னுடன்.

வரம் வேண்டி

சாகாவரம்
பெறவில்லை
நாம்
இருவரும்.
ஆனால்,
உன்னாலும்
என்னாலும்
சாகாவரம் பெற்றது
நம் நட்பு.
என்
மனைவிக்கு அடுத்து
எனக்கு
நம்பிக்கையளிக்கும்
உன் நட்பு
தொடரட்டும்
எப்போதும்.

ஒரே சிந்தனை நமக்கு

நான்
நினைக்கிறேன்.
நமக்குள்
நீ
பெரியவள்
நான்
பெரியவன் என்ற
எண்ணம்
வருவதில்லை
என்பதால் தானோ
இன்னும்
பிரியாமல் இருக்கிறோம்
நல்ல
நண்பர்களாகவே.

என் விருப்பம்

எனக்கொரு
பழக்கம்.
பிடித்தமானவைகளை
என்னருகே
வைத்துக்கொள்வது.
ஆதலால்
தோழி
விட்டுவிடாதே,
என்
கையை மட்டும்
எப்போதும்.

உன்னைப் போலவே

ஆபத்துக் காலத்தில்
அறியலாம்
நல்ல நண்பர்களை
என்பார்கள்.
நான்
கஷ்டப் படும்போது
தன்னை
அடகு வைத்துக் கொண்டு
எனக்கு உதவியது
நீ
பரிசளித்த
மோதிரம் .
மானுடம் வாழ


இந்த
பூமி
நிலை இல்லாமல்
இருக்கிறது.
சூரியனின்
ஆயுள்
குறைந்து கொண்டே
வருகிறது.
மனிதன்
மனம்
மாறி வருகிறான்.
உறவுகளில்
நிம்மதி குறைகிறது.
எனவே
மானுடம் வாழ
நட்பு
கொள்வோம்
ஒருவரோடு ஒருவர்.
வருத்தாமல் நட்பு கொள்வோம்

பூக்கள்
மென்மையானவை.
அதன் மீது
வாழும்
பனித்துளி
தூய்மையானது.
நல்ல நட்பைப்போல்.
பூவிடம்
தேனை கொள்ளையடிக்க வரும்
வண்டு ,
பூவை பறிக்காமல்
நட்பு பாராட்டி செல்வதே
உண்மை நட்பு.
புதுப்பித்தல்



நீண்ட நாட்களாகிறது
நாம்
பேசிக்கொண்டு.
நேரில் பார்த்தால்
ஒரு
புன்னகை போதும்.
புதுப்பித்துக் கொள்வோம்.
நம் நட்பை.
அங்கீகாரம்

நீதான்
என் நெருங்கிய தோழி.
நான் தான்
உனக்கு
சிறந்த தோழன் என
நமக்குள்ளே பேசிக்கொண்டிருக்கிறோம்.
எப்படி இருந்தாலும்
நம் நட்பை
அங்கீகரிப்பது
வரப்போகும் உன் கணவர் தானே.
நட்பை நிர்பந்திக்காதீர்



என் தோழி
மற்றவர்களுக்கு
நல்ல தோழியாக இருப்பதை
நான் விரும்புகிறேன்.
ஆனால்
சிலர் தங்களுக்கு மட்டுமே
தோழியாக இருக்க வேண்டுமென
அவளை நிர்பந்திப்பது தான்
வருத்தமளிக்கிறது.
வாழ்நாள் அனுமதி
Thursday, April 8, 2010 Posted by காகிதப் பூக்கள் at 7:30 AM 0 comments


நாம் சந்தித்த நாள்
நினைவில்லாமல் போகலாம்.
அனால்
பிரியும் நாள் மறக்காது.
அதற்காக
இந்த நண்பனுக்கு
ஒரு அனுமதிப் பத்திரம்
எழுதிக்கொடு,
நீதான்
என் வாழ்நாள் தோழன் என்று.

நிலவு

இந்த
நிலவுக்கு
நீதான் மாற்றுப் பெண்.
அமாவாசை நாளில்
மறக்காமல் வந்துவிடு.
அலைந்து கொண்டிருப்பார்கள்
கவிஞர்கள்
உன்னைப் பார்க்க
இந்த
நண்பனைப்போல்.